close
Choose your channels

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் ’புத்தம் புது காலை’ என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம். இந்தத் திரைப்படத்தில் உள்ள ஐந்து பாகங்களை கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் குறித்த தகவல் வந்துள்ளது. ’பாவகதைகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வர் நான்கு பாகங்களாக இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிவர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகிறது என்பதும், ’குட்டி லவ் ஸ்டோரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை பிரபல இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் ஏ.எல் விஜய் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இயக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வரும் இந்த ஆந்தாலஜி திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருவது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment