close
Choose your channels

தமிழ்நாட்டுல இருந்து வந்துபோற கடைசி உயிர் என் உயிராத்தான் இருக்கணும்.. 'ரெட் சாண்டல்வுட்' டிரைலர்..!

Sunday, August 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திராவில் செம்மர கடத்தல் செய்யும் தமிழர்களின் உயிர் போவது குறித்த கதை அம்சம் கொண்ட ’ரெட் சாண்டல்வுட்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’எட்டு தோட்டாக்கள்’, ’ஜீவி’, ’பம்பர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் வெற்றி நடிப்பில் உருவான இந்த படத்தை குரு ராமானுஜம் என்பவர் இயக்கி உள்ளார்.

வெற்றி, மயூரி,கேஜிஎஃப் ராம், எம்எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பல்காரர்களின் சிக்கிய தமிழர்களின் கதை அம்சம் என்பது ட்ரெய்லரிலிருந்து வருகிறது.

சாம் சிஎஸ் இசையில், சுரேஷ் பாலா ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கவின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் வெற்றியின் அடுத்த வெற்றி படமாக இந்த படம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.