பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்,..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட உலகின் மறக்கமுடியாத மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு மரணமடைந்த செய்தி வெளியாகியதை தொடர்ந்து, திரையுலகப் பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மின்னிய டெல்லி கணேஷ், திறமையான டப்பிங் கலைஞராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். மூன்று தலைமுறையினருடன் திரைத்துறையில் இணைந்து நடித்திருக்கிறார். வயது முதிர்வு மற்றும் உடல் நலப் பிரச்சினைகளால், அவர் நேற்று இரவு 11 மணிக்கு ராமாபுரம் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1976ல் திரையுலகில் காலடி எடுத்த டெல்லி கணேஷ், அதற்கு முன்பே நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திய விமானப்படையில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. கே. பாலசந்தர் அவர்களின் 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன்பின் சுமார் 400 படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அவர், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக நடித்து வியக்க வைத்தார்.
சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் நடித்த டெல்லி கணேஷ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதும், கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout