தனுஷ்-வெற்றிமாறனின் விசாரணையைப் பாராட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

சமீபத்தில் ரிலீஸ் ஆன 'வெற்றிமாறன்' இயக்கிய விசாரணை திரைப்படம், ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட திரையுலக விஐபிக்களின் மாபெரும் பாராட்டுக்களையும் பெற்றது.


இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மேலும் ஒருசில படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும், தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் P.N.பிரகாஷ் அவர்கள் இந்த படத்தை பார்த்தார். அவருடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளும் பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நீதிபதி P.N.பிரகாஷ், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் கதாசிரியர் சந்திரகுமார் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.