எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய்யுடன் பணிபுரிந்த பழம்பெரும் கலைஞர் காலமானார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய் என மூன்று தலைமுறை ஹீரோக்குளுடன் பணிபுரிந்த பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 93.
தமிழ் உள்பட பல மொழிகளில் சுமார் 1500 திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக ஜூடோ கே கே ரத்தினம் பணிபுரிந்துள்ளார். இவரது படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் இயல்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’முரட்டுக்காளை’ கமல்ஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’ ஆகிய படங்கள் இவரது ஸ்டண்ட் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 93 வயதான ஜூடோ ரத்தினம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகினார் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments