கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்
- IndiaGlitz, [Wednesday,April 25 2018]
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, காக்கா காக்கா மைகொண்டா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு, சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம், மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி, பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே, பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா போன்ற பல பாடல்களை எம்.எஸ்.ராஜலட்சுமி பாடியுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் இடம்பெற்ற ''நான் சிரித்தால் தீபாவள்', பாட்டி சொல்லை தட்டாதெ படத்தில் 'கார் கார் சூப்பர் கார், போன்ற பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.