close
Choose your channels

'வேட்டையன்' பாடலை பாடியவர் இவர் தான்.. அசத்தல் அனிருத்.. புரமோ வீடியோ ரிலீஸ்..!

Sunday, September 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் ஒருவர் பாடி இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் புரமோ வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடகர் மலேசியா வாசுதேவன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படத்தில் மலேசியா வாசுதேவன் குரல் அதுவும் ஏஐ டெக்னாலஜி மூலம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் புரமோ வீடியோ லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் முதல் முறை இந்த பாடலை கேட்கும் போதே எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு அனிருத்தின் இசை உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பாடலில் ஒரு காட்சியில் ரஜினி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து ஆடும் காட்சியும் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

ரஜினி படம் என்றாலே ஸ்பெஷல் ஆக பாடல்களை கம்போஸ் செய்யும் அனிருத் ’வேட்டையன்’ படத்திலும் அவரது ரசிகர்கள் ஆனந்தப்படும் வகையில் அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்திருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முதல் பாடலை கேட்கும் போதே அந்த நம்பிக்கை உறுதியாகியுள்ளது.

அதேபோல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலேசியா வாசுதேவன் குரலையும் ரசிகர்கள் கேட்க இருப்பதும் ஒரு புது விதமான அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment