பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 92.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சற்று முன்னர் லதா மங்கேஷ்கர் காலமானார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லதா மங்கேஷ்கர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
1929 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் லதா மங்கேஷ்கர் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு தனது 13ஆம் வயதில் முதல் பாடலைப் பாடி இசைத்துறையில் அறிமுகமானார்.
தமிழ் இந்தி உள்பட இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார் என்பதும் பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே, பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout