பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Sunday,February 06 2022]

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 92.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன்னர் லதா மங்கேஷ்கர் காலமானார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லதா மங்கேஷ்கர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

1929 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் லதா மங்கேஷ்கர் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு தனது 13ஆம் வயதில் முதல் பாடலைப் பாடி இசைத்துறையில் அறிமுகமானார்.

தமிழ் இந்தி உள்பட இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார் என்பதும் பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே, பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தோனியின் 'அதர்வா' கிராபிக்ஸ் நாவலில் கனெக்சன் ஆன சிம்பு!

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி 'அதர்வா' என்ற கிராபிக்ஸ் நாவலில் தோன்றியுள்ளார் என்பதும் இந்த நாவலின் டீசர் வீடியோவை தோனி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ் அல்டிமேட்டில் எதிர்பாராத திருப்பம்: கண்டெண்ட் கிங் போட்டியாளர் எலிமினேஷன்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கிங் என்று வர்ணிக்கப்படும் போட்டியாளர் முதல் வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனாவின் அம்மாவை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கண்ணழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு

8 வயதில் எழுத்தாளரான சிறுவன்… வரிசையில் காத்திருக்கும் வாசகர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிறுவன் எழுத்தாளராக மாறியுள்ளார்.

முதல் முறையாக இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் பெண்… யார் தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.