லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார் என்பதும் அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக தகவல் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் அவர்களின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தற்போது லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout