வெண்டிலேட்டர் பற்றாக்குறை: பிரபல பாடகர் பரிதாப பலி!
- IndiaGlitz, [Friday,May 07 2021]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவர் வென்டிலேட்டர் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தடுத்து திரையுலகினர் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரபல தெலுங்கு பின்னணி பாடகர் ஜி.ஆனந்த் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து போனதை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவமனையில் உள்ள அனைத்து வென்டிலேட்டர்களும் ஏற்கனவே நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால் அவருக்கு உரிய நேரத்தில் வென்டிலேட்டர் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் வென்டிலேட்டர் வேண்டுமென உதவி கேட்டனர். ஆனால் அவருக்கு தேவையான வென்டிலேட்டர் வருவதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
64 வயதான பாடகர் ஜி.ஆனந்த் அவர்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல பக்திப் பாடல்களையும் தனிப்பாடல்களாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடகி ஜி.ஆனந்த் அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.