எங்கிருந்தாலும் வாழ்க: 60களில் கொடிகட்ட பறந்த பழம்பெரும் பாடகர் மறைவு
- IndiaGlitz, [Friday,June 19 2020]
தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும், கடந்த 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவருமான ஏ.எல்.ராகவன் இன்று காலமானார்.
நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திற்காக இவர் பாடிய ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடல் உள்பட 100க்கான பாடல்கள் இன்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலித்து கொண்டே இருக்கும். மேலும் சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவரான இவருக்கு இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமாகிவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களின் மறைவுக்கு நடிகர் சங்கம் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.