எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், அர்ஜுன் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் காலமான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
எம்ஜிஆர் நடித்த ’குமரிப்பெண்’ சிவாஜி கணேசன் நடித்த ’தங்கச்சுரங்கம்’ ரஜினிகாந்த் நடித்த ’குப்பத்து ராஜா’ அர்ஜுன் நடித்த ’சட்டம் சிரிக்கிறது’ உள்பட 15 திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஈவி ராஜன். ஈவி பிக்சர்ஸ் மூலம் இந்த படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மறைந்த தயாரிப்பாளர் ராஜன், பழம்பெரும் நடிகை ஈவி சரோஜாவின் சகோதர் என்பதும், பழம்பெரும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் மைத்துனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை கொட்டிவாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த தயாரிப்பாளர் ஈவி ராஜன் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மறைந்த தயாரிப்பாளர் ராஜனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ராஜன் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘தயாரிப்பாளர் ராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் திறமையான பல கலைஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியவர் என்றும் அவரது மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments