ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட எம்ஜிஆர்-சிவாஜி படத்தயாரிப்பாளரின் பேத்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர், சிவாஜி நடித்த ஒருசில படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜிஎன் வேலுமணி அவர்களின் பேத்தி தனது குடும்பத்துடன் கேரளாவில் தவித்து கொண்டிருப்பதாகவும், அவர் தனது சொந்த ஊருக்கு வர ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு எழுதிய கடிதம் ஒன்றை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் கேரள முதல்வர் ஆகியோர், ஜிஎன் வேலுமணி குடும்பம் சொந்த ஊருக்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அந்த குடும்பத்திற்கு தன்னால் முயன்ற உதவியை செய்ய தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிஎன் வேலுமணி பேத்தி புவனா என்பவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மதிப்பிற்குரிய திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் - ஜிஎன் வேலுமணி (சரவணா ஃபிலிம்ஸ்) அவர்களின் பேத்தி, புவனா சரவணன் எழுதுவது.
படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில், பாலும் பழமும், பாதகாணிக்கை, பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி, போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து, புரட்சி தலைவரின், புரட்சி தலைவியின் பெரும் அபிமானம் பெற்றவர் எனது தாத்தா ஜிஎன் வேலுமணி என்பது எல்லோரும் அறிவார்கள். தற்சமயம் நானும், எனது தாயாரும் மிகவும் கஷ்டமான, மோசமான நிலையில் உள்ளோம். எனது தாயார், 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால் மிகவும் அவதிப்படுகிறார். தற்சமயம், நாங்கள் கேரளாவில் உள்ளோம். இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.
தங்குவதற்கு வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நானும், எனது தாயாரும், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவதிப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள். நானும் எனது தாயாரும் எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெற உங்களின் உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன். ஆந்திரவாசிகளை, இதர தேச வாசிகளை அந்தந்த முதல்வர்களிடம் பேசி சொந்த ஊர் அனுப்பி வைத்தீர்கள் பத்திரிகை ஊடகங்களில் பார்த்தேன். கேரளாவில் ஆதரவின்றி தவித்து கொண்டுள்ளோம். தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கிறோம். நம் முதல்வரிடம் பேசி சொந்த ஊர் அனுப்ப உதவுங்கள். சாப்பாடு கூட இல்லை. நான் பெண்ணாக இருப்பதால் முடியவில்லை. ப்ளீஸ் கேரளாவில் உள்ள எங்களை மீட்கவும்.
உங்களைத் தவிர எங்களை காப்பாற்று யாரும் இல்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடம் கை ஏந்தி மண்டியிட்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எங்களை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
My request to honourable @CMOTamilNadu and @vijayanpinarayi on behalf of producer Late GN Velumani family pic.twitter.com/2OAGqwxjQO
— Raghava Lawrence (@offl_Lawrence) June 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout