பிரபல இசையமைப்பாளர் காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்முறையாக வாய்ப்பு கொடுத்த பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85.
1968ஆம் ஆண்டு இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அர்ஜுனன், சுமார் 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் இவரது இசையமைப்பில்தான் முதன்முதலில் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1981ஆம் ஆண்டு அர்ஜுனன் தான் இசையமைத்த ’அடிமச்சங்கலா’ (Adimachangala) என்கிற மலையாளப் படத்தில் முதல்முதலாக கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். தனக்கு முதல்முறையாக வாய்ப்பு அளித்தவர் என்பதால் அர்ஜுனன் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போதும் அன்பு கலந்த மரியாதை உண்டு.
ஏராளமான மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அர்ஜூனன், கடந்த 2017ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை கேரள அரசிடமிருந்து பெற்றார். மேலும் அர்ஜுனனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments