'இந்தியன் 2' நடிகர் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’படத்தில் நடித்துக்கொண்டிருந்த பழம்பெரும் நடிகர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’திரைப்படத்தில் கமல்ஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகர் நெடுமுடி வேணு சற்றுமுன் காலமானதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த ’இந்தியன்’ படத்திலும் நெடுமுடிவேணு நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னரும் அந்நியன், பொய் சொல்ல போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாள மயம் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நெடுமுடி வேணு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்று முறை தேசிய விருது பெற்ற நெடுமுடி வேணு அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments