பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

இந்திய திரை உலகின் பழம்பெரும் இசையமைப்பாளர் காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பப்பிலஹரி சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1973 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான பப்பிலஹரி அதன் பின்னர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்தார். அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான ‘பாஹி 3’ என்ற பாலிவுட் படத்தில் இசை அமைத்தார்.

தமிழில் வெளியான அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி தெலுங்கு கன்னடா குஜராத்தி மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.