10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்: கமல்ஹாசன் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கியவரும், பத்து முறை தேசிய விருது வாங்கியவருமான தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட இயக்குனரான சேதுமாதவன் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பால்மணம், கல்யாண ஊர்வலம், நாளை நமதே, நிஜங்கள், மறுபக்கம், நம்மவர் போன்ற தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள படங்களையும் இயக்கியவர் இயக்குனர் சேதுமாதவன். இவர் 10 தேசிய விருதுகள் வாங்கி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி கேரள மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் சேதுமாதவன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான் என்பதும் எம்ஜிஆர் நடித்த ’நாளை நமதே’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் சேதுமாதவன் மறைவுக்கு தனது டுவிட்டரில் கமல்ஹாசன் பதிவு செய்திருப்பதாவது: காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments