பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் தளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தவருமான பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் தற்போது கருபழனியப்பன் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை அருகே நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர் மகேந்திரன் தான் தங்கியிருந்த அறையில் ஓய்வு பெற்றபோது திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்
மூச்சுத்திணறல் காரணமாக மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இயக்குனர் கருபழனியப்பன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் மூச்சுத்திணறலை சீரடைய வைத்த இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு இன்று ஏற்பட்ட மூச்சுத் திணறல் சீரடைந்து நலமுடன் உள்ளார் ! சந்திக்க சென்ற என்னிடம் "நாளைக்கு ஷுட்டிங் வைங்க , வந்திடுறேன்" என்று சொல்லிச் சிரித்தார் ! வாழ்க நீ எம்மான்!' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com