கமல்ஹாசன் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர செய்துள்ளது
கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பலர் காலமாகி வரும் நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி பழம்பெரும் இயக்குனர் ஜிஎன் ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது 90.
கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகராசன் உள்ளிட்ட படங்களையும் முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி ஆகிய படங்களையும் ஜி.என். ரங்கராஜன் இயக்கியுள்ளார். மேலும் மகராசன், ராணித்தேனி உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வயது மூப்பு காரணமாக இயக்குனர் ஜிஎன் ரங்கராஜன் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இயக்குனரின் ரங்கராஜன் அவர்கள் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருடைய மகன் ஜி.எ.ஆர். குமரவேலனும் இயக்குனர் என்பதும் அவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாஹா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout