பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்.

  • IndiaGlitz, [Sunday,April 01 2018]

கோலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். மறைந்த பழம்பெரும் இயக்குனருக்கு கோலிவுட் திரையுலக பிரபலங்கல் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய சி.வி.ராஜேந்திரன், 1967ஆம் ஆண்டு 'அனுபவம் புதுமை' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். குறிப்பாக சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, உனக்காக நான், சங்கிலி, சந்திப்பு, உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கமல்ஹாசன் நடித்த 'மாலை சூடவா', உல்லாச பறவைகள் ரஜினிகாந்த் நடித்த 'கர்ஜனை, சத்யராஜ் நடித்த 'சின்னப்பதாஸ், பிரபு நடித்த 'ஆன்ந்த், ராஜா வீட்டு கன்னுக்குட்டி, போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மறைந்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

More News

காவிரிக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்: நாசர், பொன்வண்ணன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் நடிகர் சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு டிராபிக் ராமசாமி உதவியா?

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி நடித்துள்ளார்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சூப்பர் கேரக்டரில் விஜய்சேதுபதி

முதல்படமான 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்'

குதிரைக்கு தெரியுமா காவிரி பிரச்சனை? மெரினாவில் ஏமாந்த போலீசார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த போதிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடத்த வேண்டும் என்று முகநூல் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர்.