close
Choose your channels

'லால் சலாம்' படத்தில் இணைந்த காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியுடன் நடிக்கின்றாரா?

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் தொடங்கியது என்பதும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’லால் சலாம்' திரைப்படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எஜமான், அருணாச்சலம், முத்து, வீரா, படையப்பா உள்பட பல திரைப்படங்களில் நடித்த செந்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் ’லால் சலாம்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டு கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. 33 வருடங்கள் கழித்து தமிழ் திரைப்படத்தில் ஜீவிதா ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment