பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் காமெடி நடிகர்!
- IndiaGlitz, [Thursday,May 20 2021]
பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் ஜனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அவர் பிறந்த நாளை அடுத்து முதன்முதலாக டுவிட்டரில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முதல் டுவிட்டில், ‘எனது பிறந்த நாளில் எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ஷாந்தனு உள்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்துள்ள ஜனகராஜ் கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது பிறந்தநாளில் எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! pic.twitter.com/eWgB1it6b4
— Actor Janagaraj (@ActorJanagaraj) May 19, 2021