பிரபல நடிகரின் மகன்....! இப்ப நம்ம ஊரு சப் கலெக்டர்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் சின்னிஜெயந்த் அவர்களின் மகன் தான், தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில் 75-ஆவது இடம்(அதாவது ரேங்க்-ஐ) பிடித்திருந்தார் சின்னிஜெயந்த்-ன் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவருக்கு திரையுலக பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு சப் கலெக்ட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவியில் பொறுப்பேற்றவுடன் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை பற்றி கவனம் செலுத்துவேன் என்று, ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னிஜெயந்த்:
80 மற்றும் 90 களில், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், முக்கிய ரோல்களிலும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் சின்னி ஜெயந்த். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என்று தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், கட்சிதமாக நடித்து முடிப்பார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற விஜய் சேதுபதி படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இவருக்கும், ஸ்ருதன் அவர்களுக்கும் தமிழகம் முழுவதுமிருந்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com