எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்.ஜி.,ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, தாய் மேல் ஆணை, சிவாஜி நடித்த ஆண்டவன் கட்டளை, அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், எம்.ஆர்.ராதா நடித்த ரத்த கண்ணீர், ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை, உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார். இவருக்கு வயது 87. கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
பர்மாவில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்ட இவர் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் நாடகங்களிலும் நடித்துள்ளார். திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய இவர், தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் தற்போது சென்னை நெற்குன்றத்தில் மேட்டுக்குப்பம் எம் ஆர் பள்ளி அருகில் உள்ள மகள் நடன இயக்குனர் ராதிகாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments