எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த நடிகையின் ரூ.20 கோடி சொத்து.. மீட்டு கொடுத்த தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Wednesday,September 28 2022]
எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகையின் 20 கோடி ரூபாய் சொத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீட்டு கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் நடித்த ’கண்ணன் என் காதலன்’, ’ஊருக்கு உழைப்பவன்’ ’தலைவன்’ ஆகிய படங்களிலும் சிவாஜிகணேசன் நடித்த ’வசந்த மாளிகை’ ’வாணி ராணி’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை வாணிஸ்ரீ. இவருக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் போலி பத்திர பதிவின் மூலம் வேறொருவர் கையகப்படுத்திய நிலையில் அந்த நிலத்தை புதிய சட்டம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீட்டு கொடுத்துள்ளார்.
நடிகை வாணிஸ்ரீ க்கு சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் சொத்து ஒன்று இருந்தது. 20 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த சொத்தை போலி பத்திரம் மூலம் வேறொருவர் தனதாக்கிக் கொண்ட நிலையில் அந்த நிலத்தை மீட்க நடிகை வாணிஸ்ரீ பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது போலி பத்திர பதிவை ரத்து செய்யும் சட்டத்தை தமிழக முதல்வர் இயற்றி உள்ள நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே வாணிஸ்ரீக்கு சொந்தமான சென்னை சொத்தை மீட்டு கொடுத்துள்ளார். இது குறித்த ஆவணங்களை தமிழக முதல்வர் வாணிஸ்ரீயிடம் அளித்த நிலையில் அதை பெற்றுக்கொண்ட அவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.