எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி' என்ற படம்தான். எம்ஜிஆர் நாயகனாகவும், வில்லன் போன்ற கேரக்டரில் சிவாஜியும் நடித்திருந்த இந்த படம் இருதரப்பு ரசிகர்களிடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதால் இருவரும் அதன்பின் இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில் 'கூண்டுக்கிளி'. படத்தின் நாயகிகளாக பி.எஸ்.சரோஜா மற்றும் குசலகுமாரி ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதில் குசலகுமாரி இன்று அதிகாலை காலமானார்.
'பராசக்தி', 'கொஞ்சும் சலங்கை', 'ஹரிச்சந்திரா' உள்பட பல தமிழ் படங்களிலும், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் உள்பட முன்னணி நடிகர்களுடன் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் குசேலகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகை குசலகுமாரி வறுமையில் வாடுவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குசலகுமாரியின் மறைவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com