எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

கோலிவுட் திரையுலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி' என்ற படம்தான். எம்ஜிஆர் நாயகனாகவும், வில்லன் போன்ற கேரக்டரில் சிவாஜியும் நடித்திருந்த இந்த படம் இருதரப்பு ரசிகர்களிடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதால் இருவரும் அதன்பின் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் 'கூண்டுக்கிளி'. படத்தின் நாயகிகளாக பி.எஸ்.சரோஜா மற்றும் குசலகுமாரி ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதில் குசலகுமாரி இன்று அதிகாலை காலமானார். 

'பராசக்தி', 'கொஞ்சும் சலங்கை', 'ஹரிச்சந்திரா' உள்பட பல தமிழ் படங்களிலும், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் உள்பட முன்னணி நடிகர்களுடன் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் குசேலகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகை குசலகுமாரி வறுமையில் வாடுவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை  வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குசலகுமாரியின் மறைவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

More News

அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

'பிச்சைக்காரன்' இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் என்ன?

விஜய் ஆண்ட்னி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி சாதனை வசூல் செய்தது

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழும் பெற்றது

தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்.