பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்.

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

பழம்பெரும் தென்னிந்திய நடிகையும், நடிகை செளகார் ஜானகியின் சகோதரியுமான கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85. அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 225 படங்களில் நடித்துள்ள நடிகை கிருஷ்ணகுமாரி, சிவாஜிகணேசனுடன் 'திரும்பிப்பார்', துளிவிஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், ராஜ்குமார், ஜக்கையா போன்ற தென்னிந்திய பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த ஆஷா சுந்தரி, தசவதாரா, பக்த கபீரா, ஸ்வர்ண கெளரி, சந்திரகுமாரா, சதி சாவித்ரி போன்ற படங்கள் 1960களில் சூப்பர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கிருஷ்ணகுமாரின் உடல் நாளை தகனம் செய்யப்படும் என அவரது குடுபத்தினர் தெரிவித்துள்ளனர். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

இது வைரமுத்து திருப்பி அடிக்கும் நேரமா?

கவிஞர் வைரமுத்துவுக்கு சோதனையான நாட்கள் என்றே சொல்லலாம். இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் சேரவும், இராமநாதபுரத்தில் நடைபெறும் முதல் மாநாட்டில் பங்குபெறவும் பல கோலிவுட் திரையுலகினர் முன்வந்துள்ளனர்

God Sex and Truth படத்தை எந்த இணையதளத்தில் பார்க்கலாம்: ராம்கோபால் வர்மா தகவல்

இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் உருவான வெப் திரைப்படம் God Sex and Truth. இந்த படத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார்.

நாகரீக அரசியலை நோக்கி கமல்-ரஜினி

திராவிட இயக்கங்களை அடுத்து கமல், ரஜினி கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து கட்டண உயர்வு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி இரவில் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டணங்கள் 50%க்கும் அதிகமாக இருப்பதால் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்