கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை காலமானார். திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பழமொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார்
நடிகை ஜமுனா தமிழில் சிவாஜி கணேசன் நடித்த ’மருதநாட்டு வீரன்’ ’நிச்சயதாம்பூலம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக இவர் கமல்ஹாசன் நடித்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஜமுனா ஈடுபட்டிருந்தார் என்பதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் கடந்த 1989 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார் என்பதும் அதன் பிறகு மீண்டும் 1991 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வாஜ்பாய் தலைமையிலான பாஜகவில் இவர் இணைந்தார்.
நடிகை ஜமுனாவுக்கு வம்சி என்ற மகனும் ஸ்ரீவந்தி என்ற மகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜமுனாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments