பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.. ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தவர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா நேற்று காலமானதாக அவரது மகள் தெரிவித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 84.

சேலத்தைச் சேர்ந்த சகுந்தலா நடனத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்த நிலையில், லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் பிறகு தனது நடன திறமை காரணமாக திரையுலகில் நுழைந்த சகுந்தலா, எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்த நிலையில், ஜெய்சங்கர் நடித்த சிஐடி சகுந்தலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த 'இதயக்கனி' திரைப்படத்தில் வில்லியாக அவர் அசத்தியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகிய பிறகு, சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சகுந்தலா, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் சில ஆண்டுகளாக தங்கி இருந்தார். நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகள் தெரிவித்தார். சிஐடி சகுந்தலா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

மகளை விட அம்மாவுக்கு டிரஸ் குறைச்சலா இருக்குது.. பிக்பாஸ் ஷிவானி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் சந்தித்த தமிழ் நடிகர்.. குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில்

'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.. 'விடாமுயற்சி' அறிவிப்பு எப்போது?

அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும்

'வேட்டையன்' படத்தின் மஞ்சு வாரியர் கேரக்டர்.. மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம்

பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சூர்யா? சூப்பர் ஹிட் படத்தின் 4ஆம் பாகம்..!

பாலிவுட்டில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தில், நான்காவது பாகத்தில் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.