close
Choose your channels

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.. ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தவர்..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா நேற்று காலமானதாக அவரது மகள் தெரிவித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 84.

சேலத்தைச் சேர்ந்த சகுந்தலா நடனத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்த நிலையில், லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் பிறகு தனது நடன திறமை காரணமாக திரையுலகில் நுழைந்த சகுந்தலா, எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்த நிலையில், ஜெய்சங்கர் நடித்த சிஐடி சகுந்தலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த 'இதயக்கனி' திரைப்படத்தில் வில்லியாக அவர் அசத்தியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகிய பிறகு, சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சகுந்தலா, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் சில ஆண்டுகளாக தங்கி இருந்தார். நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகள் தெரிவித்தார். சிஐடி சகுந்தலா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment