'காதலுக்கு மரியாதை' பட நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ உள்பட ஒரு தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா என்பவர் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய், ஷாலினி நடிப்பில் பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’காதலுக்கு மரியாதை’. இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் நடிகை லலிதா. இவர் மேலும் அலைபாயுதே., பரமசிவன், கிரீடம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நூற்றுக்கணக்கான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகை லலிதா இன்று காலமானார். அவருக்கு வயது 74. நடிகை லலிதாவின் கணவர் பரதன் ஒரு இயக்குனர் என்பதும் இவர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பரதன் கடந்த 1998ஆம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout