அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தந்தை விஜயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

பொதுவாக திரையுலகில் உள்ள அப்பாக்கள் தங்கள் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய சொந்தப் படம் தயாரிப்பது வழக்கம். ஆனால் நடிகர் அருண் விஜய் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தானாகவே தன்னம்பிக்கையுடன் முன்னேறி, தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான விஜயகுமார், அருண்விஜய் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்.

'மூவிஸ் ஸ்லைட்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார் இந்த படத்தை விஜய் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே அவருடன் 'தடம்' படத்தில் இணைந்து நடித்த தன்யா ஹோப் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

அருண் விஜய் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாபியா' என்ற படத்திலும் அதனை அடுத்து 'பாக்சர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து வரும் 'அக்னிசிறகுகள்' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபாஸுடன் அருண் விஜய் நடித்த 'சாஹோ' திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது