திமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்!

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன், ராஜாதேசிங்கு உள்ளிட்ட படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி, ஆலயமணி, எதிரொலி, தெய்வப்பிறவி உள்ளிட்ட படங்களிலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன்

இவர்தான் இந்தியத் திரையுலகில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1962ஆம் ஆண்டு தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.

இந்த நிலையில் எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்து திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து கொண்டிருக்கும் போது, முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் பழம்பெரும் நடிகருமான எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் திமுகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது