ஆணாதிக்க அரசியல் உலகில் சரித்திர சாதனை புரிந்தவர் ஜெயலலிதா. சிவகுமார் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகரும், மறைந்த ஜெயலலிதாவுடன் திரையுலகில் பணியாற்றியவருமான சிவகுமார், ஜெயலலிதாவின் மறைவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தி
மனித இனம் தோன்றிய நாள் முதல் நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே நடத்தி வ்ந்திருக்கிறோம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், டெமஸ்தனிஸ், டால்ஸ்டாய், காந்திஜி உள்பட பல மேதைகள் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்தே பார்த்திருக்கிறார்கள். அந்த பெண் இனத்தில், கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பிடித்த அபூர்வ பெண்மணி ஜெ.அம்மையார்.
இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி வரிசையில் இன்னொரு அயர்ன் லேடியாக மதிக்கப்பட்டார். திரையுலகில் கதாநாயகவே துவக்கத்திலிருந்து நடித்து ராணியாகவே வாழ்ந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் 116 படங்களில் நடித்தார். அதில் எட்டு படங்களில் அவரோடு நானும் நடித்திருக்கிறேன். 'கந்தன் கருணை'யில் அவர் வள்ளியாகவும், நான் முருகனாகவும், 'கிருஷ்ண லீலா'வில் அவர் பாமாவாகவும், நான் கிருஷ்ணனாகவும் நடித்தோம். 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சக கலைஞனை மதித்து என் குழந்தைகள் மூவரின் திருமணத்திற்கும் தவறாது வந்து ஆசி கூறி சென்றார்
அரசியலில் கால்பதித்து 34 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 15 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறார். அம்மா, அப்பா உயிரோடு இல்லை. சொந்தபந்தம் என்று சொல்லி கொள்கிறாற் போல, அவரோடு கூட யாரும் இல்லை. தனியாளாக, அசாத்திய துணிச்சலுடன் ஆணாதிக்க அரசியல் உலகில் கால்பதித்து, கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்று 5 முறை அவர் முதல்வரானது சரித்திர சாதனை. கண்ணீர் சிந்தும் கோடி மக்களில் இப்போது நானும் ஒருவனாய் நிற்கிறேன். இறுதி அஞ்சலி செலுத்த குடும்பத்தினருடன் சென்றேன். சூர்யா, கார்த்தி சென்று மரியாதை செய்து வந்தனர். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக
இவ்வாறு நடிகர் சிவகுமார் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout