சிவகுமாருடன் நடித்த நாயகிகள்: வைரலாகும் குரூப் போட்டோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான நடிகர் சிவக்குமாருடன் நடித்த நடிகைகளின் குரூப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்தில் அறிமுகமான நடிகர் சிவகுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும், அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பதும் தெரிந்ததே. எம்.ஜிஆர், சிவாஜி உள்பட பல பழம்பெரும் நடிகர்களுடனும், தற்போதைய மாஸ் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம், உள்பட பலர் உடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திருமண விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட போது அவருடன் நடித்த நடிகைகள் சிலரும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்போது சிவகுமாருடன் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .
இந்த புகைப்படத்தில் சிவக்குமாருடன் நடிகைகள் சீதா, லிசி, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், மேனகா, சரிதா, நதியா, ஜெயமாலினி, ராதிகா ஆகியோர் உள்ளனர்.
#sivakumar anna teams with all his fellow co artistes #seetha #lizzie #ramyakrishnan #poornimabhagyaraj #menakasuresh #saritha #Nadia #jayamalini #weddings #friendship #friends pic.twitter.com/6MLAPXwJxT
— Radikaa Sarathkumar (@realradikaa) April 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments