சீறும் சிங்கங்களாக போராடும் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.
ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ் நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா ?
வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த பீட்டா' சட்டம். உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்றும், தினம், லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, கோமாதா நம் குல மாதா'என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா?
சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள். மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும். இவ்வாறு நடிகர் சிவகுமார் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார்.

More News

ஜல்லிக்கட்டு போராளிகளின் 3 கோரிக்கைகள். தமிழக அரசு ஏற்குமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் கூடி போராட்டம் நடத்தி வருகிறது

நாம யாருங்கிறதை காட்டுவோம். சிம்புவின் அதிரடி திட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு

அரசுக்கு 3 நாள் கெடு. ரேசன் கார்டு, ஆதார் அட்டை திருப்பி அளிக்கப்படும். இளைஞர்கள் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளம் மெரீனாவில் நேற்று காலை முதல் குவிந்துள்ளது

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். சீயான் விக்ரம் வாழ்த்து

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குவியும் ஆதரவு. இளைஞர்கள் எழுச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை குறைந்த எண்ணிக்கையுள்ள இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளால் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது...