ரஜினி பெயரை மாற்றியவர்.. கலைஞர் வீட்டு கருவாட்டு வாசம்: நடிகர் செந்தாமரை மகள் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல குணச்சித்திர நடிகர் செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் பெயரை மாற்றியவர் தனது தந்தை செந்தாமரையே என்று கூறியுள்ள அவர், "கலைஞர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது, கருவாட்டு வாசனை அடிக்கும்" என நகைச்சுவையாக நினைவு கூறினார்.
தன் தந்தை குறித்துப் பேசும் போது, "சிறு வயதில் கோவாவில் கல்லுடைக்கும் தொழிலுக்கு சென்றவர் என் அப்பா. அங்கு அடிமையாக நடத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்து வந்தார். மேலும், அண்ணாதுரையின் வளர்ப்பு மகன்களுடன் படித்தவர்," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "கலைஞருடன் மிகவும் நட்பாக இருந்தவர் என் அப்பா. கலைஞர் வீட்டிற்கு அப்பாவுடன் அடிக்கடி போயிருக்கேன். நாங்கள் போகும் போதெல்லாம் கலைஞர் ஏதாவது படித்து கொண்டிருப்பார். கலைஞர் தனது மகளுக்கு என்னுடைய அப்பாவின் பெயரை தான் வைத்தார். இருவருக்கும் அந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது," என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பற்றிய மேலும் சில தகவல்களை பகிர்ந்த ராஜலட்சுமி, "ரஜினி பிரபலம் ஆவதற்கு முன்பே அவருடன் என் அப்பாவுக்கு நல்ல நட்பு இருந்தார். ‘கவிக்குயில்’ என்ற படத்தில் ரஜினி ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போதே, அப்பா அவரிடம் சென்று பேசி நட்பாக இருந்தார். ரஜினி என்ற பெயரை மாற்றி, ரஜினிகாந்த் என்று வைத்ததும் என் அப்பாதான். நியூமராலஜி படி அந்த பெயர் அவருக்கு நல்லது," என்று கூறினார்.
இந்த நேர்காணலின் முழுமையான வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout