பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் சுமார் ஒரு வருட காலம் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை அவரது சகோதரர் ரந்திர் கபூர் அவர்கள் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது ரிஷிகபூர் மும்பை தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஷிகபூர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு:  33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில்

ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை

கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 104 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்

சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை