வாரிசு பட ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?

  • IndiaGlitz, [Thursday,January 05 2023]

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த டிரைலர் வெளியாகி சில மணி நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடி கொண்டிருந்தாலும் வழக்கம்போல் சிலர் வேண்டுமென்றே இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த டிரைலரில் ஒரு சிலர் மட்டுமே கூர்ந்து கவனித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக திரைப்படங்களில் மறைந்த பழம்பெரும் நட்சத்திரங்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக இருந்துவருகிறது. அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் கூட மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் தற்போது விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மறைந்த முன்னாள் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜெமினி கணேசனின் புகைப்படம் இந்த படத்தில் எந்த கேரக்டரில் வருகிறது என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வோம்.

More News

423 விபத்துக்கள் நடந்த பின்னரும் அலட்சியம்.. பரிதாபமாக உயிரிழந்த சென்னை இளம்பெண்

 தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் 423 விபத்துகள் நேர்ந்த பின்னரும் தேசிய  நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்

'வாரிசு' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பால் விஜய்-அஜித் ரசிகர்கள் பரபரப்பு!

 அஜித் நடித்த 'துணிவு' திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் சற்றுமுன்

'வாரிசு' டிரைலர் ரிலீசான ஒரு மணி நேரத்தில் போனிகபூர் தந்த 'துணிவு' அப்டேட்

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி அல்லது ஒரு நாள் முன்பாக ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக

47 வயது பாக்யராஜ் பட நாயகிக்கு மறுமணமா? அவரே  அளித்த விளக்கம்!

பாக்யராஜ் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் 47 வயதில் திருமணமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடு: 'வாரிசு' டிரைலர்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் உலகம் முழுவதும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.