சமூக பொறுப்பு என சொல்வது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது: நடிகர் இளவரசு பிரத்யேக பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இளவரசு என்பதும் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மட்டுமின்றி இளவரசு ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பது பலருக்கு தெரியாத உண்மை ஆகும்.
இந்த நிலையில் நடிகர் இளவரசு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில கருத்துக்களை கூறியுள்ளார். சமீபத்தில் ’விடுதலை’ திரைப்படத்தில் நடித்த போது ’பெண்கள் அழும் காட்சி உங்களை பாதித்ததா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்த போது ’ஒரு கதையின் சூழ்நிலைக்கு உள்ளே நான் முழுமையாக சென்று அதன் பின் நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்போதுதான் அந்த கேரக்டரில் உண்மை இருக்கும். பொதுவாக நான் கதை படிப்பதில்லை, ஒரு இயக்குனர் கதை சொல்லி அவரது கோணத்தில் நடிப்பது தான் சிறந்ததாக இருக்கும். நான் அந்த கதையை படித்து நான் வேறொரு மாதிரியாக புரிந்து வைத்திருந்தால் குழப்பம் தான் ஏற்படும். எனவே எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் இயக்குனரை நடித்துக் காட்டச் சொல்லி அதை புரிந்து கொண்டு நடிப்பேன். அப்படித்தான் ’விடுதலை’ படத்தில் பெண்கள் அழும் காட்சியில் நடித்தேன்’ என்று கூறினார்.
மேலும் ஒரு கலைஞருக்கு சமூக அக்கறை இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு அவர் ’சமூக அக்கறை என்பது ஒரு துறையை மட்டும் சார்ந்தது என்று யோசிக்க வேண்டாம், இந்த கேள்வியே எனக்கு புரியவில்லை. சமூக அக்கறை என்பது ஒவ்வொரு தனி மனிதனிடம் இருக்க வேண்டும். இன்னொரு தனி மனிதனை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் ஒரு தனிமனிதனின் சமூக அக்கறை. இதுதான் சமூக அக்கறையின் அடிப்படை கட்டமைப்பு.
ஆனால் சமூக வலைதளங்கள் வந்த பிறகு சமூக பொறுப்பு என்று சொல்வதே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. சமூக பொறுப்பு என சொல்வது வியாபார நோக்கத்திற்காக சொல்லப்படும் பொய் மொழிகளாக மாறிவிட்டது. மேலும் ஒரு தனி மனிதனுக்கு சமூக பொறுப்பு இல்லாமல் வாழ்வதற்கு அனுமதி இல்லை. ஒரு மனிதனை தெரியாமல் இடித்துவிட்டால் மன்னிப்பு கேட்கிறோம், அதுதான் தனி மனித சமூக பொறுப்பு. இது மாதிரியான தனிமனித சமூக பொறுப்பு சார்ந்தது தான் ஒரு சமூகம்’ என கூறினார்.
மேலும் இதுபோன்ற சுவாரசியமான வீடியோக்களை காண
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com