பழம்பெரும் குணசித்திர நடிகர் காலமானார்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் சீனுமோகன் இன்று காலை காலமானார்.

'வருஷம் 16', 'அஞ்சலி', 'தளபதி', 'தலைவாசல்', 'இறைவி', ' கோலமாவு கோகிலா', 'செக்க சிவந்த வானம்' உள்பட ஒருசில படங்களிலும் பல தமிழ் சீரியல்களிலும் நடித்த நடிகர் சீனுராமசாமி. கிரேஸி மோகனின் பல நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சீனுமோகன் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் சீனுமோகன் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய ஆன்மா சாந்தியடைய கோலிவுட் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.