close
Choose your channels

ரியல் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் மன்மோகன்சிங்!

Tuesday, July 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ் உள்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, மன்மோகன்சிங் கேரக்டரில் நடித்திருந்த பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அனுபம்கெர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அனுபம்கெர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றாலும் இந்த சந்திப்பு குறித்து அனுபம்கெர் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

'அன்புக்குரிய பிரதமர் நரேந்திரமோடி அவர்களே, உங்களை நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பார்வையில் உள்ள எதிர்கால இந்தியா மிகவும் வரவேற்கத்தக்கது. உங்களது ஊக்கம் தரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு புதிய சக்தியை அளித்து வருகிறது. இந்தியா ஒரு புதிய உயரத்தை அடைய நீங்கள் தொடர்ந்து இந்த பதவியில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment