என் பேபிக்கு 60 வயது.. பாடகி ஸ்வேதா மோகன் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!
- IndiaGlitz, [Friday,March 31 2023]
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்வேதா மோகன் தனது தாயார் சுஜாதாவுக்கு இன்று 60 வயது என்று கூறி ஒரு கியூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் தேவை என்றும் அவர் நீண்ட நாள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்வேதா மோகன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த பாடகி சுஜாதா, கிருஷ்ணன் மோகன் என்பவரை கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் ஒரே மகள் தான் ஸ்வேதா மோகன் என்பதும் இவர் சுஜாதா போடவே மிகச்சிறந்த பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் பாடகி சுஜாதா பாடி வருகிறார் என்பதும் குறிப்பாக இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’ஜானி’ படத்தில் இவர் பாடிய ’ஒரு இனிய மனது’ என்ற பாடல் இன்றும் காதுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையில் 10 ஆண்டுகள் தமிழில் பாடாமல் இருந்த சுஜாதா, மீண்டும் ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ’காதல் ரோஜாவே’ என்ற பாடலை பாடினார் என்பதும் அதன் பிறகு அவர் பல திரைப்பட பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் இவர் சில பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பாடகி சுஜாதா 60-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.