'வாணி ராணி' நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராதிகாவின் ’வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் வேணு அரவிந்த் அவர்கள் கோமாவில் நிலையில் இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது. இது குறித்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சின்னத்திரையின் பிரபல நடிகர் அருண் ராஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வேணு அரவிந்த் அவர்கள் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும் தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
நான் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் வேணு சார் அவர்களின் மனைவி ஷோபா அவர்களிடம் பேசினேன் என்றும் வேணு சார் தற்போது மிகவும் நலமாக இருப்பதாகவும் கண்டிப்பாக அவர்கள் முழு குணமாகி வீடு திரும்பி விடுவார் என்றும் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தயவுசெய்து வேணு அவர்கள் கோமாவில் இருப்பது போன்ற தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அருண் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments