நீ பார்க்கும்போதும் பேசும்போதும் நெஞ்சில் மின்னல் கண்டேன்: 'வெந்து தணிந்தது காடு' சிங்கிள் பாடல்

சிம்பு நடிப்பில், கவுதம் வாசு தேவன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் துவக்கப்பாட்ட நிலையில் முதல் கட்டமாக சற்றுமுன் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது

'காலத்துக்கும் நீ வேணும்’ என்ற இந்த பாடலை கவிஞர் தாமரை எழுத, சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மெலடி இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

என்ன தர உன்னை விட நம்பும் ஓரிடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

நீ வந்த, நிழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பார்க்கும்போதும் பேசும்போதும்
நெஞ்சில் மின்னல் கொண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு

More News

சென்னையில் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்: தேதி அறிவிப்பு!

 நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் தெரிந்ததே.

அவனை அடிச்சா ஆக்டிவ் ஆகிருவாண்டா.. எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' டிரைலர்

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த 'கடமையை செய்' என்ற படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் அடுத்த படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

நீ விஜய்யுடன் நடிச்சாலே பிளாப் தான்: ரசிகரின் விமர்சனத்திற்கு யோகிபாபுவின் கூலான பதில்!

நீ விஜய்யுடன் நடிச்சாலே பிளாப் தான் என ரசிகர் ஒருவரின் காட்டமான விமர்சனத்திற்கு நடிகர் யோகி பாபு கூலான பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் ஷிவானி பிறந்த நாள் விழா: ஸ்டைலாக வந்திருந்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவுக்கு பாலாஜி முருகதாஸ் ஸ்டைலாக வருகை தந்த