வெண்ணிலா கபடிக்குழு' நடிகருக்கு இப்படி ஒரு நிலையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் திரைப்படமான ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படம் பலரை பிரபலப்படுத்தியது என்று கூறலாம். சுசீந்திரன் மட்டுமின்றி விஷ்ணு விஷால், சரண்யாமோகன், சூரி,அப்புக்குட்டி ஆகியோர் இந்த படத்தின் மூலம்தான் பிரபலமானவர்கள் என்பதும், தற்போது விஷ்ணு விஷால், சூரி ஆகியோர் கோலிவுட் திரையுலகில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஹரி வைரவன் என்பவர் விஷ்ணு விஷாலின் தோழர்களில் ஒருவராகவும் கபடி வீரராகவும் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு பிறகு ஒருசில திரைப்படங்களில் நடித்த ஹரி வைரவனின் தற்போதைய நிலை குறித்து தெரிய வந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கோமா நிலைக்கு ஹரி வைரவன் சென்றதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை செய்து மீட்டுக் கொண்டு வருவதற்கு போராடியதாகவும் அவரது மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் கோமா நிலையில் இருந்த போது கை கால்கள் வீங்கி விட்டதாகவும் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருவதாகவும் அவரை அவர் தினமும் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து நடக்க வைத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அவரது மருத்துவ செலவுக்கே செலவாகி வருவதாகவும் இதனால் தங்களது சொந்த வீட்டை விற்றுவிட்டு அந்த பணத்தில் தற்போது சிகிச்சை பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் தற்போது ஓரளவுக்கு எழுந்து நடக்கிறார் என்றும் நலமுடன் இருக்கிறார்கள் என்றாலும் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments