நாம சூரியனா இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைச்சிகிட்டு போகட்டும்: வெங்கடேஷ் பட் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

நாம சூரியனாக இருப்பேன். நம்மைப் பற்றி எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

பேஸ்புக்கில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம், அதாவது பயில்வான் ரங்கநாதன் என்பவர் என்னைப் பற்றி தரக்குறைவாக வீடியோ போட்டு இருக்கிறார். அந்த வீடியோவுக்கு அவரை தரக்குறைவாக திட்டி மெசேஜ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

என்னை நேசிப்பவர்கள், என்னுடைய ரசிகர்கள், என்னை மதிப்பவர்கள், என் மேல் பாசம் வைத்துள்ளவர்கள், தயவுசெய்து அவரை திட்டி மெசேஜ் போட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. பாவம், அவர் பணத்திற்காக செய்கிறாரா அல்லது மனநிலை சரியில்லாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. அவர் ஏதோ பிழைப்புக்காக செய்கிறார். அவர் பொழப்பை அவர் பண்ணிக் கொண்டு போகட்டும். அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த தண்ணி நம் முகத்தில் வீச வேண்டாம்.

உண்மை இல்லாமல் செய்யப்படும் பல விஷயங்கள் இன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்று என்னைப் பற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணம். தலைவர் சொன்ன மாதிரி, யார் எது சொன்னாலும், நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்து விட்டு போய்கிட்டே இருக்கணும். நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை செய்வோம், சந்தோஷப்படுவோம், சிரித்துக்கொண்டே இருப்போம், நிம்மதியாக இருப்போம். யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி நமக்கு எந்த கவலையும் வேண்டாம்.

நீங்கள் அதில் தயவுசெய்து தலையிட்டு, உங்கள் நிம்மதியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி. அவர்களுக்கு பதில் கூறி நாம் நம் தரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் சூரியனாக இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.