கொஞ்சமாவது வளருங்கள்.. சுயபுத்தியே இல்லையா? விமர்சனம் செய்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் குறித்து ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு ’உங்களுக்கு சுய புத்தி இல்லையா? கொஞ்சமாவது வளருங்கள்’ என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. 10 குக்குகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 8 குக்குகள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நான்கு சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்கள் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கோமாளிகளை விரட்டி விரட்டி அடிக்கும் வெங்கடேஷ் பட் சிறந்த எண்டர்டெயினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ’இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருங்கள், கோமாளிகள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள், மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள், நீங்கள் இதையெல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டுமே செய்கிறேன் என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கடேஷ் பட், ‘இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். கவுண்டமணி செந்திலை அடிக்கவில்லையா? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா? டாம் அண்ட் ஜெர்ரி உங்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறதா? கொஞ்சமாவது வளருங்கள், இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னேன் என்பதற்காக விஷத்தை எடுத்து நீங்கள் குடித்து விடுவீர்களா? உங்களுக்கு என்று சுயபுத்தி கிடையாதா? என்று கூறியுள்ளார். வெங்கடேஷ் பட் அவர்களின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments